தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது
temple
hindu
shivan
By Jon
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழா களைகட்டியிருக்கிறது.
முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நேற்று முதலே அதிகளவில் குவியத் தொடங்கி விட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு பணியில் அதிகளவில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.