தவிச்ச வாயும்... சிக்கிக் கொண்ட நாயும்..!
குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயின் தலை...! வைரல் வீடியோ....!
கோவை வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் தெரு நாய் ஒன்று தாகத்திற்கு அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது.
அப்போது தான் தெரியும் அந்த குடத்தில் தண்ணீர் இல்லை ஓட்டையென்று, தொடர்ந்து தலையை வெளியே எடுக்கும் போது நாயின் தலை பிளாஸ்டிக் குடத்தினுள் மாட்டிக்கொண்டது.
இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நாய் ரோட்டில் அந்த பக்கம் இந்த பக்கம் என கண்கள் தெரியாமல் ஒடிக்கொண்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு மேலாக தவித்த நாயை, அப்பகுதி மக்கள் குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயை பிடித்து குடத்தை மட்டும் அறுத்து எடுத்து மீட்டனர்.
தற்போது குடத்தினுள் தலை மாட்டிக்கொண்டு நாய் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.