மம்தா கட்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்! வெங்கையா நாயுடு அதிரடி!!

suspended thirinamool congress party 6 mps
By Anupriyamkumaresan Aug 04, 2021 08:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்தது முதல், பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விவகாரங்களை குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்ட, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது.

மம்தா கட்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்! வெங்கையா நாயுடு அதிரடி!! | Thirinamool Party 6 Mps Suspend From Rajyasabha

அவையில் அத்துமீறலை கண்டித்து ஏற்கனவே அவைத்தலைவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து எதிரிக்கட்சியினர் பல்வேறு விவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பி அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், அமளியில் ஈடுபடும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்றும் அவை தலைவர் வெங்கைய நாயுடு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தற்போது அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.