கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா மூன்றாம் அலை வ்ரக்கூடும் என்றே வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், “திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது நாள்தோறும் 30,000 என்ற அளவில் பாதிப்பு பதிவானது. ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதியுற்றனர். இந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
அதனால், ஊரடங்கு பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சில நாடுகளில் கொரோனா தொற்று 3ஆம் அலை தொடங்கிவிட்டது. கொரோனா அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை, அது யூகம் தான். மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு ஆக்சிஜன் வசதிகளுடன் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 1,736 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.