கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது - எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல்

corona children tamilnadu thirdwave
By Irumporai Jun 18, 2021 02:56 PM GMT
Report

கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து 5 மாநிலங்களில் சில பகுதிகளில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து எய்ம்ஸ் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேலே உள்ளவர்களை விட 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கபட்ட ஹரியானா,டெல்லி,திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்விலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

எனவே கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது அறிகுறி இல்லாத பாதிப்பாகவே இருக்கும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.