சசிகலா தலைமையில் மூன்றாவது அணியா? வரிசைகட்டும் பிரபலங்கள்
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்தே, தமிழக அரசியல் களம் அனல் பறக்கிறது. கூட்டணி கட்சிகளின் குழப்பம், தேசிய கட்சித் தலைவர்களின் வருகை என நாளுக்கு நாள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ் – ஈபிஎஸ், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அதே வேளையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது இல்லத்தில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவோம்.

அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். விரைவில் தொண்டர்களையும் சந்திப்பேன் என்று கூறினார். அதாவது, சென்னை வந்த பிறகு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் மௌனம் காத்த சசிகலா இன்று முதல் அரசியலில் மீண்டும் களமிறங்கவிருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் அதனை தொடர்ந்து பரபரப்பான சம்பவங்கள் அரேங்கேறின சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் வரிசைக் கட்டிக் கொண்டு சசிகலாவை நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி என்று தான் எனக்கு சசிகலாவை தெரியும். அந்த சகோதரியை நாங்கள் இன்று பார்க்க வந்துள்ளோம் . அவரது உடல் நலத்தைப் பற்றி இன்று விசாரிக்க வந்தோம். நன்றி மறப்பது நன்றன்று.. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தோம் என கூறினர் இயக்குநர் இமயம் பாரதிராஜா நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கூட்டாக சசிகலாவினை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா பாரதிராஜா பின்னர் கூறுகையில்,ஒரு தமிழச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனவே வந்து பார்த்தேன். அரசியலில் இருந்த வெற்றிடம் அனைத்தையும் நிரப்ப தான் சசிகலா வந்துவிட்டார், எனதெரிவித்தார். இந்த நிலையில் உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுகவினரை அழைக்கவில்லை என தெரிவித்தார்.
சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது அவர் அமமுகவினரைத் தான் அழைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். இதற்கு பதில் கருத்து தெரிவித்துள்ள அமுமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் சசிகலா கூறினார். அதிமுக – அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை.
அதிமுகவுடன் அமமுக இணையாது. அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பர்” என்று விளக்கமளித்துள்ளார். சிறைவாசம் முடிந்து கொஞ்ச நாள் அமைதியாக இருந்த சசிகலா தற்போது அரசியல் சதுரங்கத்தை தொடங்கிவிட்டதாக கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். தற்போது நடந்த சந்திப்புகளையும் பொருத்திப் பார்த்தால் சசிகலாவை அதிமுகவில் இணையாவிட்டால் அடுத்து 3வது அணியினை உருவாக்குவாரா? இதற்கான பதில் சசிகலாவிடம் தான் உள்ளது.