மூளையை உண்ணும் அமீபா; 3ஆவது உயிரிழப்பு - மக்களே இதை அவசியம் கவனீங்க..
மூளையை உண்ணும் அமீபா மூலம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
மூளை உண்ணும் அமீபா
கேரளா, கோழிக்கோடுபகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதன் அடிப்படையில், மூளையை உண்ணும் அமீபா மூன்றாவது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு பேர் இந்த அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது அசுத்தமான நன்னீர் மூலம் பரவுகிறது.
என்னென்ன அறிகுறிகள்?
இது மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளை. உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே வளர்கிறது. இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.
நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும். தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5-18 நாட்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. இதனால் தமிழக எல்லை பகுதிகளில் வாழும் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.