திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால்.? பாஜகவுக்கு வைகோ பதில்

admk dmk ntk
By Jon Feb 16, 2021 02:55 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன. இந்நிலையில் தமிழில் பேசுவதால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சேலம் மண்டலம் மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, ”திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் பாஜகவுக்கு தற்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

பாஜகவுடன் கைகோர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என இயற்ககைக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறார் என்றும் குற்றசாட்டியுள்ளார். அனைத்து துறைகளிலும் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழ் மொழியில் பேசுவதாலும், திருக்குறளை உச்சரிப்பதாலும் தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.