யார் வர வேண்டுமென யோசித்து முடிவெடுங்கள்: ஹெச்.ராஜா
people
bjp
raja
karaikudi
By Jon
இணக்கமான அரசு இருந்தால்தான், பல நல்ல திட்டங்கள் வரும் என காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா போட்டியிடும் நிலையில்,தேவகோட்டை அருகே உள்ள கோட்டவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், யார் நமக்கு பிரதிநிதியாக வரவேண்டும் என்று யோசித்து வாக்களிக்க வேண்டும் என கூறினார்.
மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்தால்தான் பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.