முழு ஊரடங்கை முன்னிட்டு திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது ஒட்டி நேற்று திண்டுக்கல்லில் மீன்கள் மற்றும் காயகறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தை அடுத்து கருத்தில் இன்று சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 4 மணி வரை 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றே திண்டுக்கல்லில் மீன்கள் வாங்க சோலை ஹால் தியேட்டர் அருகே உள்ள மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட இன்று சுமார் 10 மடங்கு அதிக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் காந்தி காய்கறி மார்கொட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதேபோல நாட்டு கோழி ஆட்டிறைச்சி கோழிக்கறி வாங்கும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.