உரிமைக்காக ஒரு மாவீரன் நடத்திய அறப்போர் : தியாக தீபம் திலிபன்

By Irumporai 2 வாரங்கள் முன்

காந்தி, நேரு, காமராஜ் என்று தலைவர்களின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி பார்த்திருப்போம். இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவதில் பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதையும் பார்த்திருப்போம்.

ஆனால் தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம்.

பள்ளி, கல்லூரிகளில் வருகைப் பதிவேடு பதிவு செய்யும் நேரத்தில் நம் நண்பர்களில் யாராவது ஒருவரின் பெயர் திலீபன் என்பதாக இருந்து, நாம் காதுகளில் அடிக்கடி ஒலித்திருந்தாலும் அந்த பெயருக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை அறியாமல் கடந்திருப்போம்

ஆனால் தமிழ்நாட்டின் இளைஞர்களில் பலருக்கு அந்த பெயரை சூட்டியதன் பின்னால் ஒரு பெரும் வலி நிறைந்த வரலாறு இருக்கிறது.

தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட ஒரு 23 வயது இளைஞனின் உயிர்த்தியாக வரலாறு இருக்கிறது அந்த தியாக வரலாற்றை பெருமையுடனும், மரியாதையுடனும் நினைவு கூறுகின்றது நமது ஐபிசி தமிழ்  

[