கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் நுழைந்த திருடர்கள் - துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண் - குவியும் பாராட்டு

thieves woman-fought திருடர்கள் போராடிய-பெண் குவியும்-பாராட்டு
By Nandhini Apr 01, 2022 05:08 AM GMT
Report

குஜராத், கதோதரா நகர், ராம் கபீர் சொசைட்டியைச் சேர்நத்வர் ரியா. இவர் கல்லூரி மாணவி. இவர் தன்னுடைய வீட்டில் இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டின் பின்புறம் ரியாவிற்கு ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்தது. அப்போது, வீட்டிற்கு பின்புறம் வந்து ரியா பார்த்தபோது, மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் ரியாவிற்கு முன் வந்து நின்றான். ரியா என்ன, ஏது என்று கேட்பதற்குள் அந்த நபர் பாய்ந்து வந்து ரியாவின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளான்.

அதன் பின்னர், 2 பேர் வீட்டின் அறைக்குள் நுழைந்தனர். இதனால், ரியா அதிர்ச்சி அடைந்தாள். அப்போது, அந்த கும்பலில் ஒருவன் தூங்கி கொண்டிருந்த ரியாவின் இளைய சகோதரியை தாக்க முயற்சி செய்தான். அப்போது, ரியா மனதிற்குள் நன்றாக புரிந்து விட்டது. இவர்கள் கொள்ளையர்கள் என்று.

ரியாவின் கழுத்தில் கத்தி வைத்திருந்த நபர் சற்று கவனம் திரும்பினார். இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட ரியா, சுதாரித்துக்கொண்டு அந்த நபரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டு, கத்தி கூச்சலிட்டார்.

ரியாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வரவே, அந்த கொள்ளைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

அந்த சம்பவத்தில் ரியாவின் இடது கையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாணவி பேசுகையில், நான் பயப்படவில்லை. எனக்கு நம்பிக்கை இருந்தது. தைரியமுடன் செயல்பட்டேன். என்னையும், எனது சகோதரியையும் காப்பாற்றினேன். திருட்டையும் தடுத்துவிட்டேன் என்றார்.

துணிச்சலுடன் திருடர்களிடம் போராடிய மாணவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் நுழைந்த திருடர்கள் - துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண் - குவியும் பாராட்டு | Thieves Woman Fought