டாய்லெட்டை திருடி பல கோடி சம்பாதித்த கொள்ளையர்கள் - எப்படி தெரியுமா?
தங்க கழிவறையை திருடிய கொள்ளையர்கள் அதன் மூலம் பல கோடி சம்மதித்துள்ளனர்.
தங்க கழிவறை
இங்கிலாந்தில் உள்ள பிளென்ஹெய்ம் அரண்மனை(blenheim palace) யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தார்.
இத்தாலியைச் சேர்ந்த மவுரிசியோ கட்டெலா கருத்தியல் கலைஞர், 18 கேரட் தங்கத்தில் கழிவறை ஒன்றை உருவாக்கி இந்த அரண்மனையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
கழிவறை திருட்டு
அமெரிக்கா என்று பெயரிடப்பட்ட இந்த கழிவறை 98 கிலோ எடை கொண்டது. இந்த கழிவறை 6 மில்லியன் டாலர்களுக்கு (ரூ. 52 கோடி) காப்பீடு செய்து வைக்கப்பட்டிருந்தது. வெறும் காட்சிப்பொருளாக மட்டும் இல்லாமல், அரண்மனைக்கு வருவோர் புக் செய்து பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கழிவறை திருப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர், கடந்த 2023 ஆம் ஆண்டு சிலரை கைது செய்தனர். 4 பேர் கொண்டு கும்பல் 2 கார்களில் அரண்மனைக்கு வந்து ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டு 5 நிமிடத்தில் திருடி சென்றுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தாலும், தற்போது வரை அந்த கழிவறையை மீட்கவில்லை.
கைதானவர்களின், குறுஞ்செய்திகள், குரல் பதிவேடுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், கழிவறையை உருக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.