திட்டம் போட்டு திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம் - போலீசாருக்கு தண்ணி காட்டிய கொள்ளையன்
கடலுாரில் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 60 வயது கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
உரக்கடையில் கொள்ளை
கடலுார் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சுந்தர்.இவர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் விதைகள் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி சுந்தர் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அருகில் உள்ள மாவட்டவங்களான கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் வலை வீசி தேடிய நிலையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பகலில் மருந்துவிற்பனை இரவில் கொள்ளை
இதையடுத்து போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற கொள்ளையன் சிக்கினான். அவனிடம் இருந்து 1 லடசத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைதான கொள்ளையன் சாகுல் ஹமீது மீது திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இவருக்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் என இரண்டு மனைவிகள் உள்ளனர்.
மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த சாகுல் ஹமீது இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொள்ளை நடந்த நாள் அன்று சாகுல் ஹமீது சென்னை சென்று திரும்பி வந்த போது பண்ருட்டியில் பேருந்தில் இருந்து இறங்கி உரம் மற்றும் பூச்சி மருந்து கடையில் கொள்ளையடித்துள்ளார்.
திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
கொள்ளையடித்த பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே சாகுல் ஹமீதுவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த நிலையில் போலீசார் மீது பணம் எங்கே என கேட்டபோது கேரளாவில் சொகுசு விடுதியில் அரை எடுத்து தங்கி அங்கு நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாகவும்,அதில் பணம் செலவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் கொள்ளையடித்த பணத்தை நடிகைகள் இடமே கொடுத்ததாக போலீசாார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
60 வயதில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்த உல்லாச கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.