பிராண்டட் ஷூ மட்டும் தான்.. குறிவைக்கும் திருடன் - அல்லாடும் குடியிருப்புவாசிகள்!
பிராண்டட் ஷூக்களை திருடன் திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருடன் செயல்
பெங்களூருவில் கியாஸ், பலசரக்கு, பால், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்கனவே நெருக்கடியை அளித்து வருகிறது. இதில், புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளது.
என்னவென்றால், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் விலை உயர்ந்த காலணி, மற்றும் பிராண்டட் ஷூக்கள் தொடர்ந்து திருடு போகிறது. எச்எஸ்ஆர் லே அவுட்டில் இந்த திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
வைரல் வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் சல்யன், சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது வீட்டு வாசலில் இருந்த ஐந்து பிராண்டட் ஷூக்களை ஒரு திருடன் திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
@BlrCityPolice @CPBlr @Tejasvi_Surya
— Kshipraj Salian (@salian015) June 19, 2024
This is to bring to your notice that on the wee hours of 17th June ‘24 an intruder robbed items (shoes mainly and bike parts) from houses in Sector 3 HSR Layout.
5 pairs of expensive shoes has been stolen from my house. pic.twitter.com/ZaeiUEFN1H
மேலும், அவற்றைத் திருடி ஒரு பையில் வைத்துக் கொண்டு மாடியின் மேல்புறம் திருடன் திருடச் செல்வதும் பதிவாகியுள்ளது.
உடனே இதுகுறித்து போலீஸில் புகாரளித்த நிலையில், திருடனை தேடி வருகின்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.