"திருடுனா ஒன் பிளஸ் மட்டும் தான்..வேற எதையும் திருட மாட்டேன்": திருடிய போனை திருப்பிக் கொடுத்த கொள்ளையன்
உத்தர பிரதேசத்தில் ரயிலில் செல்போன் திருடிய நபர் தனக்கு பிடித்த செல்போன் மாடல் அது இல்லை என்பதால் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் தற்போது திருட்டு என்பது சிலருக்கு முக்கிய தொழிலாகிவிட்டது. அதுவும் இந்தியாவில் உள்ள வாட மாநிலங்களில் மக்களிடையே திருட்டு பயம் அதிகமாகவே உள்ளது.
அதிலும் சில திருட்டுகளில் அரங்கேறும் சம்பவங்களும் சற்று வினோதமாக அமைவதும் தற்போது வழக்கமாகி விட்டது. அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் சென்றுக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த செல்போனை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.
பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த திருடன் தான் அதை ஒன் ப்ளஸ் போன் என நினைத்து திருடியதாகவும், ஆனால் அது சாம்சங் என்பதால் அது தனக்கு தேவையில்லை என்று மீண்டும் பயணியிடமே அந்த போனை கொடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.