திருடனுக்காக வாதாடிய வழக்கறிஞர் - வக்கீல் பீஸ் கொடுக்க வழக்கறிஞரிடமே திருட்டு
வக்கீல் பீஸ் கொடுப்பதற்காக வழக்கறிஞரிடமே திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு வழக்கு
கோவை மாவட்டம் புளியகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(48). சிறுவயது முதலே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இவர் மீது அந்த பகுதியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.
சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.
செல்போன் திருட்டு
மணிகண்டனுக்காக வாதாடிய வழக்கறிஞருக்கான பணம் தர அவரிடம் காசு இல்லாத நிலையில் அதற்காக மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக மற்றொரு வழக்கறிஞரின் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய செல்போனை திருடியுள்ளார். இந்நிலையில் மீண்டும் மணிகண்டன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.