திருட போன இடத்தில் டான்ஸ் ஆடிய நபர் - வைரலாகும் வீடியோ

uttarpradesh thiefdance
By Petchi Avudaiappan Apr 19, 2022 08:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் நுழைந்த திருடனின் டான்ஸ் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் சந்தாவுளி பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் அன்ஷு சிங் என்பவர் கடந்த 16 ஆம் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல காலை கடைக்கு போன அன்ஷு சிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் கலைந்து கிடந்தவுடன் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்துள்ளார்.

உடனடியாக தனது கல்லா பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த அன்ஷு சிங் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். 

அதில் சம்பவம் நடந்த நாளன்று அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்த ஆசாமி ஒருவர் கடைக்குள் நுழைவதும்,  அதன் பின்னர் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையன் திருடும்போது மேலே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்திருக்கிறார். அதன்பிறகு திடீரென பணத்துடன் நடனம் ஆட தொடங்கிய  சிறிது நேரம் கழித்து அங்கிருந்து தப்பியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் அன்ஷூ சிங் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.