இந்த பொய்களால் நான் வீழ்ந்து விட மாட்டேன் : சமந்தாவின் உணர்ச்சிமிக்க பதிவு
கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக் ஆக இருப்பது சமந்தா நாகசைதன்யா விவகாரம் தான், மேலும் சமந்தா குறித்து பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் வலம் வர ஆரம்பித்துள்ளன.
சமந்தா இவளவு கோடி ஜீவனாம்சம் கேட்டார், குழந்தை இல்லாததே பிரிவிற்கு காரணம் எனபல செய்திகள் வெளியாகின. இது போன்ற பொய்யான செய்திகள் தன்னை எந்தளவிற்கு பாதித்துள்ளது என்பது குறித்து சமந்தா உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
இது பற்றி சமந்த தனதுன் ட்விட்டர் பதிவில் : "நம்முடைய தனிப்பட்ட உறவில் நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வது என்னை நெகிழச் செய்துள்ளது.
— Samantha (@Samanthaprabhu2) October 8, 2021
எனக்கு எதிராக பரப்பப்பட்டு பொய்யான வதந்திகள் மற்றும் பரப்பப்படும் கதைகளுக்கு எதிராக அக்கறை காண்பித்து என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு வேறு உறவுகள் இருந்தன.
குழந்தைகளை நான் ஒருபோதும் விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, இப்போது நான் கருக்கலைப்பு செய்தேன் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயல். குணமடைய எனக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
தனிப்பட்ட முறையில் என் மீதான இந்த தாக்குதல், இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சொல்லும் இந்த பொய்கள் என்னை வீழ்ச்சியடைய வைக்க விட மாட்டேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.