2025 சனியின் அருளால்.. இந்த 4 ராசிகளுக்கு நடக்கபோகும் பெரிய சம்பவம் - என்ன நடக்கும்?
சனி பெயர்ச்சியினால் நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
சனி பெயரச்சி..
இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும், ஏழரை சனியால் சில ராசிகளுக்கு தீவிரமான பாதிப்பை எற்படுத்துகிறது.
ஒரு ராசியின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் போது அந்த ராசியின் ஏழரை சனி ஆரம்பமாகிறது. சனி பகவான் 12 ராசிகளுள் கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும். புத்தாண்டில் மார்ச் மாதம் இவர்களது வாழ்வில் பல வித நல்ல திருப்பங்களை கொண்டு வரும்.
வாழ்வில் பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்லுறவு இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களைத் தரும். 2025-ம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சி இவர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வெற்றியை அடைவார்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
கும்பம்
வருகின்ற ஆண்டு மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த பணிகள் அனைத்தும் நல்லபடியாக நடந்துமுடியும். நிதி ஆதாயம் கிடைக்கும்