இந்த கனவுகள் அடிக்கடி வருகிறதா? கவனமா இருங்க.. பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்!

India World
By Swetha Nov 11, 2024 04:30 PM GMT
Report

எந்தெந்த கனவுகள் எதிர்மறையான பலனை தரும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவுகள்..

கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் ஆழ்ந்த தூக்கத்தில் கானும் ஒரு சாதாரண விஷயம்தான். என்றாலும் ஸ்வப்னா சாஸ்திரத்தின்படி, நாம் கானும் ஒவ்வோரு கனவிற்கும் ஒரு குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த கனவுகள் அடிக்கடி வருகிறதா? கவனமா இருங்க.. பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்! | These Dreams Might Bring Problems And Sufferings

அதில் சில கனவுகளால் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும். ஆனால் சில கனவுகள் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சில மோசமான கனவுகள் குறித்து அதனால் ஏற்படும் எதிர்மறை பலன்கள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

கனவில் குலதெய்வம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

கனவில் குலதெய்வம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

எண்ணெய் தடவும் கனவு

ஸ்வப்னா சாஸ்திரத்தின்படி, கனவில் எண்ணெய் தடவுவது போன்ற கனவை காண்பது மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது.அதாவது இது போன்ற கனவுகள் நமக்கு தெரியாமலே நாமே பிரச்சனையை உருவாக்கப் போகிறது என்று அர்த்தமாகுமாம்.

இந்த கனவுகள் அடிக்கடி வருகிறதா? கவனமா இருங்க.. பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்! | These Dreams Might Bring Problems And Sufferings

எண்ணெய் தடவுவது போல் கனவு கண்டால் அந்த நபருக்கு உடல் நலத்தில் கூடுதல் கவனமாக இருக்கவும். சிலருக்கு மரணத்திற்குச் சமமான வலியை கூட தர வாய்ப்புள்ளதாம்.

மரம் விழுவது போன்ற கனவு

கனவில் மரம் விழுவது போல் இருந்தால் அது மிகவும் மோசமான கனவாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த அளவுக்கு பெரிய மரம் விழுகிறதோ, அந்த அளவுக்கு சேதாரம் ஏற்படும். அதே போல மரம் விழுவது போன்று பார்த்தால்,

இந்த கனவுகள் அடிக்கடி வருகிறதா? கவனமா இருங்க.. பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்! | These Dreams Might Bring Problems And Sufferings

விரைவில் நமக்கு பெரிய ஒரு பிரச்சினையை சந்திக்க நேரிடும். இத்தகைய கனவுகள் நமக்கு மோசமானதாகவும், நம் மனதிற்கு தொந்தரவு தரக்கூடியதாகவும் அமைகிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனமாகவும், வண்டி, வாகன பயன்பாட்டில் கவனமாகவும் இருப்பது அவசியம்.

திருமணம் செய்யும் கனவு

திருமணம் ஆவதை பார்ப்பது மிகவும் மங்களகரமான விஷயம் என்றாலும், கனவில் யாரேனும் ஒருவர் திருமணம் செய்து கொள்வது போன்ற கனவு கண்டால்,

இந்த கனவுகள் அடிக்கடி வருகிறதா? கவனமா இருங்க.. பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்! | These Dreams Might Bring Problems And Sufferings

அது அந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தன்னுடைய துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.