இந்த தடவை மிஸ் ஆகாது; வெளுத்து வாங்கபோகும் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என முன்பு அறிவித்திருந்த நிலையில், இன்றே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உள்பட,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மைலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை என 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம்
கடலோர தமிழகத்திலும், உள்தமிழகத்திலும் ஓர் சில இடங்களில் கனமழை வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை என்றாலும்,
இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது வலுவடையலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, சென்னையில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.