எனக்கு பிடிக்கணும்'னா இப்படி தான் இருக்கனும்...வெக்கத்துடன் சொன்ன ஸ்மிருதி மந்தனா..!
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வளம் வருபவர் ஸ்மிருதி மந்தனா. மும்பையில் பிறந்த இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
இது வரை 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3073 ரன்களும், 118 டி20 போட்டிகளில் விளையாடி 2853 ரன்களும், 4 டெஸ்ட் போட்டிகளில் 325 ரன்களும் எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் முதல் முறை வீழ்த்திய போது, அதற்கான முக்கிய பங்காற்றியவர் ஸ்மிருதி மந்தனா. இவருக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் அவருக்கு எப்படி பட்ட பசங்களை புடிக்கும் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
எனக்கு பிடித்த...
ஸ்மிருதி மந்தனாவிடம் ஒரு ரசிகர் நேரலை தொலைக்காட்சியில் கேள்வியைக் கேட்டபோது சிரிப்பில் மூழ்கினார் ஸ்மிருதி மந்தனா. அந்நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் அவருக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த நபரிடம் என்ன குணங்களைத் தேவை என வினவினார்.
உடனே சட்டென சிரித்த அவர் பிறகு, "இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை, ஒரு நல்ல பையனாக இருக்க வேண்டும், என்னைக் கவனித்து, என் விளையாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி நான் விரும்பும் இரண்டு குணங்கள் இவைதான் என வெக்கத்துடன் பதிலளித்தார்.