சென்னை அணியில் இந்த 4 வீரர்கள் இல்லை: சோகத்தில் ரசிகர்கள்

Chennai super kings Ipl 2021
By Petchi Avudaiappan Jun 11, 2021 02:40 PM GMT
Report

துபாயில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் 4 வீரர்கள் ஆட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 20-ம் தேதி துவங்கப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் கொரோனா மற்றும் சர்வதேச தொடர்களில் இடம்பெற்றிருக்கும் காரணத்தால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் மொயின் அலி, சாம் கரன், ஆஸ்திரேலிய அணியின் ஜேசன் பெஹ்ரண்டாஃப், நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் ஆகிய 4 வீரர்களும் இடம்பெற மாட்டார்கள் என கூறப்படுகிறது.

இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.