நாங்கள் தோற்க இவர்கள் 2 பேர் தான் காரணம்: கடுப்பான இலங்கை கேப்டன்!
இரண்டு முக்கிய விக்கெட்டுகள் தான் முதல் டி20 போட்டியில் நாங்கள் தோற்க காரணம் என இலங்கை அணி கேப்டன் ஷனாகா கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனை துரத்திய இலங்கை அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் அஸ்லான்கா மற்றும் பண்டாரா ஆகியோரின் விக்கெட்டுகள் தான் போட்டியை மாற்றிவிட்டது.
இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என அவர் கூறினார்.