இந்தியாவிலேயே அதிகம் பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம் இதுதான்!
அதிக பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுப்படும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

அதன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எந்த மாநிலத்தில் அதிகம் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியிட்ட தேசிய குற்றப்பதிவு அறிக்கையின்படி,
இந்தியாவில் மொத்தம் 31,516 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் இந்த அறிக்கை கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகவில்லை. மேலும் அதில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான குற்ற விகிதமும் (Crime Rate Per Lakh Population) தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கும் மாநிலம் அசாம். கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1,113 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவாகியுள்ளது. 9ஆவது இடத்தில் இருப்பது டெல்லி. ஒரு ஆண்டில் மட்டும் 1,212 பாலியல் வன்கொடுமை பதிவாகியுள்ளது. சத்தீஸ்கர் 8ஆவது இடத்தில் உள்ளது.
மாநிலம்
2022ஆம் ஆண்டு மட்டும், 1,246 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவாகின. ஜார்கண்ட் மாநிலம் 7ஆவது இடத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டு 1,298 பாலியல் வன்கொடுமை புகார்கள். 6ஆவது இடத்தை பிடித்த மாநிலம் ஒடிசா. ஆண்டில் 1464 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு.

5ஆவது இடத்திலிருக்கும் மாநிலம் ஹரியானா. 2022ஆம் ஆண்டில் 1,787 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டது. 4ஆவது இடத்தை பிடித்துள்ளது மகாராஷ்ட்ரா. 2,904 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 3ஆவதாக இடம்பெற்றுள்ள மாநிலம் மத்திய பிரதேசம்.
2022ஆம் ஆண்டு மட்டும் 3,029 பாலியல் வன்கொடுமை புகார்கள். உத்தர பிரதேசம் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதில் 3,690 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலம்.
இந்த மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும், 5,399 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு 20ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 421 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil