விஜய் பட நடிகர் ஜெயசீலன் உயிரிழப்பு - இப்படி ஒரு பிரச்சனையா..
துணை நடிகர் ஜெயசீலன் உயிரிழந்துள்ளார்.
ஜெயசீலன்
புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன். 40 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உயிரிழப்பு
நோய் முற்றியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரின் இறுதிச் சடங்குகள், வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், சில படங்களில் மட்டுமே வசனம் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தெறி படத்தில் தப்பு தப்பாக ரைம்ஸ் படிக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இவரின் திடீர் மறைவிற்கு சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.