ஸ்ரீமதி உடலில் நகக்கீறல்கள் இருந்தன - தாய் பரபரப்பு பேட்டி

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Aug 28, 2022 10:08 AM GMT
Report

ஸ்ரீமதி உடலில் நெக கீரல்கள் இருந்ததாக அவரது தாய் பேட்டில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமதி மரண வழக்கு 

கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் மரணம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பாக பெற்றோர் நீதிமன்றத்தில் மாணவியின் உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் குழுவை ஒன்றை நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.

பின்னர் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் உடலை நல்லடக்கம் செய்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உடலில் நகக்கீறல்கள் 

நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்த மாணவி ஸ்ரீமதி தாய், தந்தை, தம்பி உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மாணவி ஸ்ரீமதி உடலில் நெக காயங்கள் இருந்ததாக அவரது தாய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர்,

ஸ்ரீமதி உடலில் நகக்கீறல்கள் இருந்தன - தாய் பரபரப்பு பேட்டி | There Were Scratches On The Body Of Srimathi

தனது மகள் இறந்த பிறகு அவளது உடலை தன்னுடைய அண்ணி சென்று பார்த்ததாகவும் பின்னர் அவர் தன்னிடம் வந்து பாப்பா உடலில் நெக காயங்கள் இருப்பதாகவும், மார்பு பகுதியில் பற்கள் பதிந்தது போல் உள்ளது என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.