‘’ எங்களுக்கு யாருமில்லை, நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் ’’ - வேதனையில் உக்ரைன் அதிபர்

Russia Ukraine Zelensky UkraineRussiaCrisis
By Irumporai Feb 25, 2022 04:51 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருவதாகவும் தங்களின் நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  

ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :

ரஷ்யா பெரியளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், வல்லரசு படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகிறது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது.

உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறீர்களா என்றால், இல்லை என்பது தான் பதில். நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். உக்ரைனை ஆதரிப்பதாகக் கூறி அனைவரும், இப்போது அஞ்சுகிறார்கள்.

ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள், ராணுவத்தினர் 130- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய படைகள் தன்னையும், தன் குடும்பத்தினரையும் முதல் எதிரியாகக் குறி வைத்துள்ளது, தான் தற்போது தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாக கூறியுள்ளார்.