நான் பண்ணதுல எந்த தப்பும் கிடையாது - டென்ஷன் ஆன விராட் கோலி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வீரர்கள் தேர்வில் எந்த தவறும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தநிலையில், தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஆடும் லெவனில் எந்த தவறும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் போட்டியின் துவக்கத்தில் இருந்தே எங்களை நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடிக்குள்ளே வைத்து கொண்டனர் என்றும், இதுவே டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற பெரிதும் கை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் 30 – 40 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், இதுவே எங்களுக்கு சற்று பின்னடைவை கொடுத்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.