பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மகாவிஷ்ணு திமுகவினருடன்...எடப்பாடி பழனிசாமி சாடல்!
மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்து கொண்டது தவறு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கோவில்பட்டியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும்,
மகாவிஷ்ணு
தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் குறித்துதான் கேள்வியெழுப்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணு,

திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது." என்று தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil