இதை செய்யவில்லையா நீங்கள்? இனி உங்களுக்கு ரேசன் கடைகளில் அரிசி, கோதுமை கிடையாது..!
நீங்கள் உங்கள் ரேசன் கார்டை கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்துடன் இணைக்கவில்லை என்றால் அரிசி, கோதுமை வழங்கப்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் அவகாசம்
மத்திய அரசு ஆதார் அட்டையை ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார் அட்டை மூலம் பல்வேறு மோசடிகளும் அவவ்போது அரங்கேறி வருகிறது.
இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க ஆதார் கார்டுடன், பான் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி ரேசன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலரும் இணைக்காமல் இருந்து வருகின்றனர்.
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜுன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேசன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூடுதல் அவகாசம் கொடுத்தும் ரேசன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இணைக்காத ரேசன் அட்டைதாரர்களுக்கு ஜுலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த பொருளும் கிடைக்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது?
Step 1; இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
Step 2; இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
Step 3; இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
Step 4; இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
Step 5; இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
Step 6; அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
Step 7; இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.