அதிமுக - பாஜக கூட்டணியிடையே பிரச்சனை இல்லை - இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி
அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னை கமலாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசியல் பற்றியும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசியதோடு, திமுக அரசியல் பற்றி விமர்சனம் செய்தார்.

மேலும், அவர் பேசுகையில், மத்திய அரசு ரயில்வே துறைக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி
ஆளுநர் விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய பொய்யை சொல்லி வருகிறது. மேலும், அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது என தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.