தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியலே இல்லை - வானதி சீனிவாசன்..!
தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியலே இல்லை என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் எதிரப்பு
அண்மையில் பாஜக ஐடிவிங் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை எரித்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதோடு பல கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இதனிடையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் எழ தொடங்கியது.
அப்போது தான், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை என கூறியிருந்தார்.
பாஜக இல்லாமல் தமிழகத்தில் அரசியல் இல்லை
இந்த சமயத்தில் தற்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் அரசியல் நகர்வுகள் நடக்காது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பொறுப்பும் பொறுமையும் சரிவிகிதத்தில் கொண்டு அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த நிகழ்வில் பேசினார்.