இந்திய அணியின் இந்த வீரருக்கு இடமில்லை ... ரசிகர்கள் அதிர்ச்சி
தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் இளம் வீரர் ஒருவருக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கவுள்ளது.
அதற்கு காரணம் சீனியர் வீரர்கள் பலர் ஓய்வு இல்லாமல் கடந்த 3 மாதங்களாக விளையாடி வருவதாலும், ஜூலை மாத தொடக்கத்தில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரை கணக்கில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இந்திய அணியை ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக வழிநடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் உம்ரான் மாலிக்கிற்கு தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மொஹ்சின் கானிற்கே இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொஹ்சின் கானின் பந்து வீச்சு அனைவரையும் கவர்ந்துள்ளதால் அவர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.