தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கன்னியாகுமரியில் குரங்கு அம்மை நோய் அறிகுறி என்ற தகவல் உண்மையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் 97 சதவீத பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்த வரை 85.80 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.அதன் படி வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை.
குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.