தமிழ்நாட்டில் ஜாதி, மத கலவரம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை - டிஜிபி சைலேந்திர பாபு

Tamil Nadu Police
By Thahir Mar 20, 2023 10:22 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என். டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை பகுதியில் உள்ள ராஜபாளையம் 11- வது பட்டாலியனில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

There is no law and order problem in Tamil Nadu There is no law and order problem in Tamil Nadu

அப்போது அவர் பேசுகையில், தமிழக காவல் துறை இந்தியாவிலேயே புலன் விசாரணையில் தமிழக காவல்துறையாக முதல் இடத்தில் உள்ளது. தமிழக காவல்துறை நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் நடந்த காவல் துறைக்கான பணிதிறன்கள் போட்டியில் தமிழக காவல்துறை 8 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ரிவால்வர் பிரிவில் முதல் முறையாக தமிழக காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் தங்கப்பதக்கம் வென்றார்.

அந்த போட்டியில் சிஆர்பிஎப், பிஎஸ்எப் படை பிரிவுகளை பின்னுக்கு தள்ளி தமிழக காவல் துறை சாம்பியன் பட்டம் வென்றது. 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை 

95-96 ஆண்டுகளில் ராஜபாளையம் பகுதியில் மிகப்பெரிய ஜாதி கலவரம் நடைபெற்றது. அப்போது ராஜபாளையம் கேம்பில் 8 மாதம் தங்கி இருந்து பணியாற்றினேன்.

There is no law and order problem in Tamil Nadu

அந்த ஜாதி கலவரத்தில் 48 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக காவல் துறையின் சிறப்பான செயல்பட்டால் தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் இல்லை.

துப்பாக்கி சூடு,வடமாநில கொள்ளை, தொடர் கொலை உள்ளிட்ட எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை.

தமிழகம் அமைதியாக இருப்பதற்கு காரணம் பட்டாலியன். காவல் துறைக்கு பலமாக ராணுவமாக பட்டாலியன் படை பிரிவு உள்ளது.

குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது

நான் டிஜிபியாக பொறுப்பேற்ற பின் ஆயிரம் சார்பு ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இப்போது 444 பேர் எடுக்கப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளனர். 3,600 காவலர் பணிக்கு தேர்வு முடிந்துள்ளது. வரும் மே மாதம் புதிதாக 600 சார்பு ஆய்வாளர்கள், 3,600 காவலர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழக காவல்துறையில் மகளிர் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதில் மகளிர் போலீஸாருக்கு 9 சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். போக்சோ வழக்குகளில் காவல்துறையை எடுத்து வரும் நடவடிக்கைகளால் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

போக்சோ குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். பட்டாலியனில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் தோட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.