அதிமுக உடன் அமமுக இணைய வாய்ப்பே இல்லை - டிடிவி தினகரன்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami TTV Dhinakaran
By Thahir Nov 17, 2022 07:10 AM GMT
Report

அதிமுக உடன் அமமுக கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக உடன் இணைய வாய்ப்பு இல்லை 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை.

0.25% கூட அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. மிகப்பெரிய விரக்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

there-is-no-chance-of-aamk-join-with-aiadmk-ttv

அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓர் அணியாக சென்றால்தான் திமுகவை எதிர்க்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக அணிலை போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.