மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாணவியின் மறு பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவர்களை குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மாணவியின் பெற்றோர் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
பின்னர் மனுதாரர் தரப்பிடம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நேற்று மாணவியின் மரணம் தொடர்பாக மாணவின் தந்தை தொடர்ந்த வழக்கில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவை உயர்நீதிமன்றமே நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.