பிரான்ஸ் பெண்ணை கரம் பிடித்த தேனி இளைஞர் - சுவாரஸ்ய காதல் கதை!
பிரான்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து தேனி இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
கடல் கடந்த காதல்
தேனி அருகே முத்துதேவன்பட்டியைச் சேர்ந்தவர் கலைராஜன். 2017ல் மேல் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.
அங்கு அவருக்கு மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
நெகிழ்ச்சி சம்பவம்
இவர்களது திருமண நிகழ்வில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து மணப்பெண் மரியம் கூறுகையில், “பாரிசில் படிக்க சென்ற போது, கலைராஜனை சந்தித்தேன். அப்போது அவர் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம்.
தமிழர் முறைப்படி திருமணம் செய்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.