அமமுக கட்சி கூட்டத்திற்கு வந்த டிடிவி தினகரனை வரவேற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அமமுக கட்சியின் செயல்வீரர் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக கட்சியின் நிர்வாகிகள் லந்து கொண்டனர்.
தினகரன் வருகை
இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்த டிடிவி தினகரன் தேனிக்கு வருகை தந்தார். தேனி ஆண்டிபட்டி அருகே வரும் பொழுது

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் இருந்து வரும் சையதுகான் மற்றும் கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் டிடிவி தினகரனை வரவேற்றனர்
அரசியல் சந்திப்பு இல்லை
திருமண நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் அதிமுகவின் பிரிவை சரி செய்து மீண்டும் அதிமுக தனித்துவம் காணுமா? ஓபிஎஸ் தரப்பில் சசிகலா இருவரும் இணைவார்களா என்று கேள்வி எழுப்பினர்.

தங்கள் யூகத்திற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என பதில் அளித்தார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் டிடிவி தினகரன் சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது சையதுகான் எனது நீண்ட கால நண்பவர் ஆதலால் சந்தித்தோமே தவிர அரசியல் சார்ந்த எந்த சந்திப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.