இயற்கை அழகான மலைகள் மற்றும் நீர்வளங்கள் நிறைந்து உள்ள தேனியின் வரலாறு தெரியுமா?

Tamil nadu Theni
By Vinothini Aug 19, 2023 11:18 AM GMT
Report

தென்னிந்தியாவில் அழகிய மாவட்டமான தேனியின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தேனி மாவட்டம்

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட இந்த மாவட்டம் மதுரை மாவட்டத்தை அடுத்து அமைந்துள்ளது. இது முதலில் மதுரை மாவட்டத்தில் இருந்தது, பின்னர் மதுரையில் இருந்து பிரிந்து 1996ல் உருவாக்கப்பட்டது, அதன்பிறகு 1997ல் தனி மாவட்டமாக தொடங்கியது.

theni-history-in-tamil

மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான தேனி நகரில் மாவட்டத் தலைமையகம் அமைந்துள்ளது. மாவட்டம் 3,242 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்த மாவட்டம் அதன் இயற்கை அழகு, மத ஸ்தலங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது.

தேனி வரலாறு

தேனி மாவட்டம் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது. இப்பகுதி சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு உட்பட பல வம்சங்களால் ஆளப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மாவட்டம் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மாவட்டம் மெட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தேனி மாவட்டம் 1996ல் உருவாக்கப்பட்டது.

கலாச்சாரம்

தேனி மாவட்டம் கும்மி நடனம் மற்றும் கரகாட்டம் நடனம் போன்ற நாட்டுப்புற கலைகளுக்கு இப்பகுதி பெயர் பெற்றது. இந்த நடனங்கள் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்படுகின்றன. நாதஸ்வரம் மற்றும் தவில் போன்ற பாரம்பரிய இசைக்காகவும் இந்த மாவட்டம் அறியப்படுகிறது.

theni-history-in-tamil

இடியப்பம், அப்பம், கொழுக்கட்டை போன்ற உணவுகளை உள்ளடக்கிய பாரம்பரிய உணவு வகைகளுக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. இந்த மாவட்டம் அதன் உணவு வகைகளில் மசாலா மற்றும் மூலிகைகள் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றது.

பொருளாதாரம்

அதன் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல், கரும்பு, பருத்தி, தென்னை, நிலக்கடலை போன்ற முக்கிய பயிர்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்த மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. பருத்தி நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகள் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில்களாகும். ஆண்டிபட்டி தாலுகாவில் கைத்தறி நெசவு மற்றும் விசைத்தறியும் செழித்து வருகிறது. உத்தமபாளையம் தாலுகாவில், தேயிலை உற்பத்தியில், “ஹைவாவிஸ் எஸ்டேட்’ முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாவட்டத்தில் பெரியாறு, சுர்லியார் மற்றும் வைகை நுண் நீர்மின் நிலையம் ஆகிய மூன்று நீர் மின் நிலையத் திட்டங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

வைகை அணை வரலாறு

தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குவது வைகை அணை. வருசநாட்டில் உள்ள மூல வைகையாற்றில் உருவாகும் வைகை ஆற்றை மறித்து குறுக்கே அணை கட்டி வைகை அணை என பெயர் வைத்தனர்.

theni-history-in-tamil

வைகை அணையில் தேக்கப்படும் வைகை ஆறு, முல்லைப் பெரியாறு ஆற்றின் தண்ணீர் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்கும் பயன்படுகிறது.

theni-history-in-tamil

1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையின் உயரம் 111 அடியாகும். அணையின் நீர்தேக்கப்பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி வைக்கமுடியும். இந்த அணை பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.1893ஆம் ஆண்டில் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

theni-history-in-tamil

பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மதராசு மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஜான் பென்னிகுயிக்

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

theni-history-in-tamil

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

theni-history-in-tamil

இந்த மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஜனவரி 15, 2013 அன்று திறந்து வைத்தார்.