கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் நிலை
தேனி, ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 180க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் இங்கு மாணவர்கள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியது. அதில். பள்ளி சீருடையில் இருக்கும் 2 மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்கின்றனர்.
நடவடிக்கை?
மேலும், புகைப்படங்களில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் அகற்றுகின்றனர். ஒட்டடை அடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன்,
சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்து அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.