தேனியில் நடிகர் அஜீத்திற்கு 6 அடியில் சிலை வைத்த தீவிர ரசிகர்...!

Ajith Kumar
By Nandhini Dec 11, 2022 12:06 PM GMT
Report

தேனியில் நடிகர் அஜீத்திற்கு 6 அடியில் ரசிகர் ஒருவர் சிலை வைத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

வலிமை

சமீபத்தில் நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கினார். இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்தார். இப்படம் ‘பாக்ஸ் ஆபிஸி’ல் வசூலை வாரி குவித்தது.

சில்லா, சில்லா பாடல் வெளியீடு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகர் அஜீத் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியானது. இப்பாடல் வெளியாகி சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான இதயங்களை கொள்ளையடித்து சாதனை படைத்துள்ளது. ஆட்டம், பாட்டத்துடன் அஜீத் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.

theni-fan-actor-ajith-6-feet-statue

6 அடியில் சிலை வைத்த ரசிகர்

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், தேனியில் அவரது ரசிகரான காளிதாஸ் புதியதாக உணவகம் தொடங்கி, அதில் 6 அடியில் நடிகர் அஜீத்திற்கு சிலை வைத்துள்ளார்.

இந்த உணவகத்திற்கு காளிதாஸ் ‘வீரம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதையடுத்து, தன் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கியுள்ளார். மேலும், ஒவ்வொரு வருடமும் அஜீத்தின் பிறந்தநாள் அன்றைக்கு 1 ரூபாய்க்கு டீ வழங்கி வருகிறார்.