ஓ.பி.எஸ்க்கு நெருக்கடி: தேனியில் அதிமுகவிற்கு உருவாகியிருக்கும் ஆபத்து என்ன?
வன்னியர் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கும் விதமாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சீர்மரபினர் வீடு, வீடாக சென்று மக்கள் காலில் விழுந்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என சான்றிதழ் வழங்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றிட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடம் நேரில் சென்று மனுக்களையும் அளித்துள்ளனர். ஆனால், இவர்களின் கோரிக்கையை ஒன்று கூட அதிமுக அரசு நிறைவேறவில்லை. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நடத்தி வருகிறார்கள். கம்பம் , உ.அம்மாபட்டி, சின்னமனூர் பகுதிகளில் இச்சங்கத்தினர், கருப்புக்கொடி ஏந்தி ஒவ்வொரு வீடாகச் சென்று தங்களது சமுதாயத்தினர் காலில் விழுந்து அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.
கம்பம் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட இருப்பதாக வெளியான தகவலையடுத்து அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவிற்கு எதிப்பு கிளம்பியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பை ஏற்படுத்தியிருக்கிறது.