கடைசி மூச்சிலும் மகளை காப்பாற்றி உயிர்விட்ட தாய் - என்ன நடந்தது?
தேனி அருகே தண்ணீரில் தத்தளித்த மகளை கரை சேர்த்துவிட்டு உயிரிழந்த தாயின் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அபுதாஹீர், தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர் இவரது மனைவி ஆமினா மற்றும் 13 வயது மகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார்.
அங்கு முல்லை பெரியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 13 வயது மகளை தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தார், தண்ணீரில் இறங்கி மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் தண்ணீரில் இழுத்துசெல்லப்பட்டார்.
இதனை கண்ட அபுதாஹீர் இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார். எப்படியோ ஒரு வழியாக கஷ்டப்பட்டு மகளை மீட்டு கரை சேர்த்துள்ளார்.
மீண்டும் மனைவியை காப்பாற்ற முயற்சித்தபோது இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாயார் ஆமீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தந்தை அபுதாஹீரை தேடும் பணியில் தீவிரமடைந்துள்ளனர்.