தேனி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். 25.07.1996 அன்று மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்து தேனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 01.01.1997 முதல் தேனி மாவட்டம் செயல்படத் தொடங்கியது.
பெரியகுளம், உத்தம பாளையம்,வருவாய் கோட்டங்களை உள்ளடக்கியது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் வைகைஅணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, உத்தம பாளையம் வட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய முக்கிய சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
முதல் மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட போது சிறப்பு அலுவராக நியமனம் செய்யப்பட்ட திரு.கே.சத்தியகோபால் மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 01-01-1997 முதல் 22-04-1998 வரை பணியாற்றினார்.அதன் பிறகுத் திரு. பி.எம்.பசீர் அகமது,திரு. பிரதீப் யாதவ்.திரு. அதுல் ஆனந்த்,திரு. சுனில்பாலிவால்.,
திரு. ராஜேஸ் லக்கானிதிரு.ஹர்சகாய்மீனா,திரு. எஸ்.ஜெ.சிரு,முனைவர்.பி.முத்துவீரன்,திரு. எ.கார்த்திக்,முனைவர்.கே.எஸ். பழனிசாமி,திரு. ந.வெங்கடாசலம்,திரு. எஸ்.நாகராஜன்,திரு. ந.வெங்கடாசலம்,திருமதி . ம.பல்லவி பல்தேவ்திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றியுள்ளனர்.
க.வீ.முரளிதரன் ஐஏஎஸ்
இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி ஈரோடு ஆட்சியராக மாற்றப்பட்ட பிறகு இவருக்குப்பதிலாக வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறையின் இயக்குநர் க.வீ.முரளிதரன் தேனி தேனி மாவட்டத்தின் 17 வது ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
2003-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆர்.வி.ஷஜுவனா ஐஏஎஸ்
அதன் பிறகு திருமதி. ஆர்.வி.ஷஜுவனா அவர்கள் தேனி மாவட்டத்தின் 18 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷஜீவனா கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 29 ஆண்டுகளாக அரசுப் பணியில் உள்ளார்.
ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக கல்விக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகள், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.