தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை
தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே தனியார் நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள தனியார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.1லட்சத்து 10ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த கம்பெனியின் சூப்பர்வைசர், நடுக் நடுகூட்டுடன்காடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பத்திர செல்வம் (45) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.