தாலியை திருடிய ஐயர்..! திருமணம் நடத்தி வைக்க வந்தாரா..? திருட வந்தாரா..!
தெலுங்கானாவில் திருமணம் நடத்தி வைத்த ஐயரே தாலி சங்கிலியை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பெத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜனசுந்தர் என்பவருக்கும் திராட்சு என்பவருக்கும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. 
மணமகன் தாலி கட்டிய பின், தங்கத்தால் தயார் செய்யப்பட்ட தாலி சங்கிலியை மணமகள் கழுத்தில் மணமகன் அணிவிப்பது அவ்வூர் வழக்கமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தாலியுடன் வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கசங்கிலியை காணவில்லை என்பதை மணமக்கள் குடும்பத்தார் உணர்ந்தனர். உடன் இருந்த ஐயரும் காணவில்லை என்பதால், சந்தேகத்தின் அடிப்படையில், மணமக்களின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 
வீடியோ பதிவில், திருமணம் நடத்தி வைக்க வந்த ஐயர் தான் தாலி சங்கிலியை திருடியது அம்பலமானது.