பாலத்தில் இருந்து 4000 ஆயிரம் போல்டு மற்றும் நட்டுகள் திருட்டு - ஷாக்கான இன்ஜினியர்
By Thahir
ஹரியானாவில் பாலத்தில் இருந்து 4000 ஆயிரம் நட்டு மற்றும் போல்டுகள் காணமால் போயிருப்பது தெரியவந்துள்ளது.
பாலத்தில் திருட்டு
ஹரியானா மாநிலம் யமுனாநகரில் சஹாரன்பூர்- பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இதன் நடுவே பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பாலத்தை நெடுஞ்சாலைகள் துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாலத்திலிருந்த 4000 ஆயிரம் போல்டு மற்றும் நட்டுகள் காணமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் எந்த புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் 60 அடி இரும்பு பாலம் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.